tamilnadu

img

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்து தரக் கோரி உண்ணாவிரதம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கும்பகோணம், செப்.26- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் மணல் மாட்டுவண்டி தொழி லாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் மணல் குவாரி அமைத்து தரக் கோரி கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, பி.ஜே.ஜேசு தாஸ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாநி லக் குழு உறுப்பினர் நாகராஜன், சில்வர் தொழிலாளர் சங்க தலைவர் ஆ. செல்வம், மாட்டுவண்டி தொழிலாளர் சங்க திருப்புறம்பியம் செயலாளர் செந்தில், கடிச்சம்பாடி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம், தெற்கு கும்ப கோணம், வடக்கு பாபநாசம், திரு விடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தஞ்சை பொதுப்பணித்துறை அலு வலகத்தில் 16.8.2019 அன்று பொதுப் பணித்துறை அதிகாரி, செயற்பொறியா ளர் சிஐடியு தலைவர்களுடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் உறுதி யளித்தபடி மாட்டுவண்டி தொழிலா ளர்கள் தேவனோடை குவாரியில் மணல் எடுக்க வழங்கப்பட்ட அனுமதி யை உடனே அமல்படுத்த வேண்டும். வேலை இழந்து வருமானமின்றி வாழ் விழந்து வறுமையோடு போராடும் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள் ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைத்திட வேண்டும். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். லாரி கள் மூலம் மணல் எடுப்பதை அனு மதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண் ணாவிரதம் இருந்தனர்.  அப்போது கும்பகோணம் வட் டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாட்டுவண்டி தொழிலா ளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தெரிவிக்கை யில், சிஐடியு தலைவர்கள் மற்றும் அதி காரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் சார்பில் கும்ப கோணம் அருகே உள்ள தேவனோடை பகுதியில் மாட்டுவண்டி மணல் எடுக்க அனுமதியை அமல்படுத்த வேண்டும். கொத்தங்குடி பகுதியில் உடனடியாக குவாரி அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். விரைவில் முள்ளங் குடி பகுதியில் குவாரி அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்தின் சார்பில் எதிர் வரும் திங்கட்கிழமை அன்று தரப்படும் மாட்டு வண்டிகளின் விபரப் பட்டிய லின்படி மாட்டு வண்டிக்கு டோக்கன் முறையில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டு வண்டிக் கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கம் சார் பில் தெரிவிக்கப்பட்டது என்றார்.  அதற்கு பொதுப்பணித் துறையின் சார்பில், தேவனோடை பகுதியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப் படுகிறது. கொத்தங்குடி பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கனிம வளத்துறைக்கு ஆய்வு அறி க்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தொழிற்சங் கத்தின் சார்பில் ஏற்கனவே அளிக்கப் பட்ட மாட்டுவண்டி பட்டியலின் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற் போது அளிக்கப்படும் மாட்டு வண்டி களின் விபரப் பட்டியலை பரிசீலனை செய்து வருவாய் கோட்ட அலுவல ருக்கு அனுப்பி வைக்கப்படும். திரு விடைமருதூர் வட்டம் முள்ளங்குடி கிரா மத்தில் மாட்டு வண்டி குவாரி திறக்க உரிய ஆய்வு அறிக்கை கனிம வளத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுவண்டி அனைத் திற்கும் அடையாள அட்டை வழங்கப் படும். அதன் விபரப்படி மணல் எடுக்க டோக்கன் வழங்கப்படும் என அரசு அதி காரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்ணா விரதத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டோம் என ஜெயபால் தெரி வித்தார்.

;