தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆங்கிலத் திறன்களை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் தலைவர் டாக்டர் சந்திரசேக ரன், பயிற்சி அளித்தார். பயிற்சி பட்டறைக்கு கல்லூரி முதல்வர்(பொ) சி.ராணி தலைமை வகித்தார். ஆங்கி லத்துறை தலைவர் ஆர்.ராஜ்மோகன் வரவேற்றார். பேராசி ரியர்கள் எஸ்.நித்தியசேகர், வி.வினோத்குமார், டி. மாணிக்கவாசகம், ஏ.விமலா, என்.நிஷா, ஜெ.சுஜிதா உள் பட பலர் கலந்து கொண்டனர்.