tamilnadu

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பணியின் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம், சிவகங்கை பூங்கா, காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட 14 இடங்களில் ரூ.904 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.இதில் திருவையாறு பேருந்து நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிவியாழனன்று நடைபெற்றது. இந்த பணியில் தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பிராந்தையை சேர்ந்த சரவணன் (30) ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடங்களை இடிக்கும் போது மேலே சென்ற மின் வயர் மீது எதிர்பாராத விதமாக அவரது கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி சரவணன் தூக்கி வீசப்பட்டார். 

அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் வெள்ளியன்று இறந்தார். இது குறித்து தஞ்சை கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானசம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

;