tamilnadu

img

சிவகங்கை அருகே கண்மாயில் கி.பி.12 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....

தஞ்சாவூர்:
சிவகங்கை அருகே வி.புதுகுளம் கண்மாயில், பாண்டியர் காலத்தை சேர்ந்த கி.பி.12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட துண்டுக் கல்வெட்டுகள் கல்வெட்டு ஆய்வாளர் களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், உக்கடை அப்பாவுத் தேவர் மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்ரெ.சின்னையா, சரபோஜி கல்லூரிமுதுகலை மாணவர்கள் அறிவுக்கரசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தனர்.இதுகுறித்து தில்லை கோவிந்தராஜன் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊரான வேம்பற் றூர் அருகே வி.புதுகுளத்தில் கருங்கற்களைக் கொண்டு ஐந்து தலைப்புகளைக் கொண்ட கண்மாய் கட்டப்பட் டுள்ளது. அக்கருங்கற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. 

அத்துண்டு கல்வெட்டுகளில் நிலங்களின் எல்லைகளும், அதன் ஆவணத்தை எழுதியவர்களின் பெயர்கள் மட்டுமே காணப்படுகின்றன. பாண்டியமன்னர்கள் ஆட்சி காலத்தில் வேம்பற்றூர் குலசேகர சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் வழங்கப்பட்டதையும், இப்பகுதியில் வைகையாறு சீவல்லபபேராறு என்ற பெயரில் அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.  சங்ககாலந்தொட்டே வேம்பற்றுாரில் வேம் பற்றூர் குமரனார், பெரும்பற்றபுலியூர் நம்பி, சிராப்பள்ளி அந்தாதி பாடிய நாராயணக்கவி முதலானோர் வாழ்ந்துள்ளனர்.அத்துடன் நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றொரு துண்டுகல்வெட்டில் சீவல்லவனான களவழிநாடாள்வான் என்பவன் குறிக்கப்பட்டிருப்பதோடு, அவனது பெயரில் ஆறும், மடையும் வழங்கப்பட்டுள்ளதையும் தெரிவிக்கிறது.

சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 13-வது ஆட்சியாண்டைச் சார்ந்ததிருவாதவூர் கல்வெட்டிலும் ஜெயங் கொண்ட சோழன் சீவல்லவனான களவழிநாடாள்வான் குறிக்கப் பெற்றிருக்கக் காணலாம். இவன் அரசியல் பின்புலத்துடன் இப்பகுதியில் குறுநிலத் தலைவனாக விளங்கியுள்ளான் என்பதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன” என்றார். மதுரை ஆர்.டி.ஜி.ஏ கல்லூரி மாணவர்கள் எம்.அய்யனார், என்.பிரகாஷ் ஆகியோர் அளித்த தகவலின் பேரில்இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;