தஞ்சாவூர், ஜூலை 29 – தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில், செவ்வாய்க்கிழமை காலை சுமார் இரண்டு வயது மதி க்கத்தக்க ஆண் புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தது. தகவலறிந்த வன த்துறையினர், மானை மீட்டு, உடல் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதை த்தனர். வல்லம் பகுதிளில் உள்ள வனப்பகுதியில்தான் மான்கள் உள்ளன. இந்நிலை யில், உணவு தேடி வந்த மான் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு இற ந்திருக்கலாம் என வனத்து றையினர் தெரிவித்தனர்.