தஞ்சாவூர், ஆக.16-- அதிகாரிகளின் தாமதத்தால் வழங்கப்ப டாமல் இருந்த, கொரோனா நிவாரண நிதி யை, மாவட்ட ஆட்சியரிடம் பேசி, மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெற்றுத் தந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம் மேலத்திருப்பந்துருத்தி தெற்கு ராஜவீதியில் எஸ்.ராஜேந்திரன் தலைமை யில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளு க்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. 27 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தலைவராக எஸ்.ராஜேந்திரன், துணைத் தலைவராக பி.கலாராணி, செயலாளராக எம்.பூவரசன், துணைச்செயலாளராக வி.சுதா, பொருளாளராக பி.சிவாஜி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய அமைப்பை வாழ்த்தி சி.பி.எம் மாவட்டக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.ராம், வி.ச ஒன்றியச் செயலாளர் ராம லிங்கம் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமு கப்படுத்தி அமைப்பின் செயலாளர் பி.எம்.இளங்கோவன் பேசினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய கொரோனா கால நிவாரண நிதி ஜூலை மாதம் முதல் ஆக.8 வரை வழங்கப்ப டாமல் இருந்த நிலையில், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களின் அலட்சியம் குறித்து கண்டனம் தெரிவித்த மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன், உடனடியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் அலைபேசியில் தொ டர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, 24 மாற்றுத் திறனாளி களுக்கு கொரோனா கால நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், கண் பார்வையற்ற 11 பேருக்கு விரைவில் வழங்கு வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.