tamilnadu

img

கொரோனா விழிப்புணர்வு பணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில், கொரோனா விழிப்புணர்வு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், தவமணி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள் மடத்திக்காடு சுதாசினி சுப்பையன், செருவாவிடுதி வடக்கு த.விஜயராமன், செருவாவிடுதி தெற்கு த.ராமஜெயம் மற்றும் ஆர்.சீனிவாசன், என்.இளமாறன், எஸ்.திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.