tamilnadu

img

ஏ.டி.எம்மில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை வங்கியில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

 தஞ்சாவூர். டிச.21–  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகன் திலீபன் (22), ஒரத்தாடு காவல் நிலையத்தில் ஊர்காவல் படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை, ஒரத்தநாடு அக்ரஹாரத்தி்ல உள்ள, கனரா வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் பத்தாயிரம் பணம் வெளியில் வந்த நிலையில் இருந்தது.  இதைப் பார்த்த திலீபன் பணத்தை எடுத்துச் சென்று கனரா வங்கி மேலாளர் சேகரிடம் ஒப்படைத்தார். இச்செயலை பாராட்டி, சனிக்கிழமை ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், கனரா வங்கி மேலாளர் சேகர், உள்ளிட்டோர் அவரை பாராட்டி அவருக்கு, சன்மானம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.