தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய கடைமடைப் பகுதிகளில் ஆசியன் வங்கி பொறியியல் ஆலோசகர் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டார். ஆசியன் வங்கி நிதியுதவியு டன் கல்லணைக் கால்வாய் புனர மைப்பு பணிகள் ரூ. 2,300 கோடியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புனரமைப்பு பணிக்கு நிதி வழங்க உள்ள ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பொறியியல் ஆலோசகர் ரகுவீர்பிரபு கடைமடை பகுதியில் ஏரி குளங்களை ஆய்வு செய்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கரிசவயல் ஏரி, வாய்க்கால், புதுப்பட்டினம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக் காடு கிராமத்தில் ரூ.63 லட்சத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்ட கழனியாகுளத்தை பார்வை யிட்டார். பேராவூரணி ஒன்றியம் ஈச்சன்விடுதி ரெகுலேட்டரை (நீர் ஒழுங்கி) ஆய்வு செய்தார். செயற் பொறியாளர் முருகேசன், உதவி செயற் பொறியாளர்கள் சண்முக வேல், அன்பரசன், உதவி பொறியா ளர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.