tamilnadu

கூட்டுறவு-தனியார் உற்பத்தி செய்த சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக.11- அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் பாரபட்சமின்றி ரூ.2000 வழங்க வேண்டும், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளர்களுக்கு கொரோனா காலத்தில் 5 லட்ச ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு தனியார் உற்பத்தி செய்த சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டு நெசவாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் திருபுவனம், கும்பகோணம், துவரங்குறிச்சி, தாராசுரம், திருச்சேறை, ஆடுதுறை உள்ளிட்ட  6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருபுவனத்தில் நெசவாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.பி.நாகேந்திரன் தலைமையிலும், தாராசுரத்தில் கே.ஆர்.சந்திரன் தலைமையிலும், கும்பகோணத்தில் சுப்புராமன், அனந்தராமன், திருச்சேறையில் டி.என். ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;