tamilnadu

img

ஆட்சியர் உத்தரவை அலட்சியப்படுத்தும் அலுவலர்கள்  வறுமையில் வாடும் தூய்மைக் காவலர்கள் சிஐடியு கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பணிபுரியும் தூய்மைக் காவலர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கு, ஆட்சியர் உத்தரவுப்படி தினக்கூலியாக ரூபாய் 385 வழங்க வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஜேசுதாஸ், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சி களிலும், கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும் தூய்மை காவலர், துப்புரவு பணியாளராக நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்களுக்கு சொற்பக் கூலியாக ரூபாய் 150 முதல் 250 மட்டுமே வழங்கப்பட்டு வரு கிறது. 28.9.2019 அன்று தஞ்சை ஆட்சியர் உத்தரவிட்டபடி, குறைந்தபட்சம் தினக்கூலியாக ரூபாய் 385 வழங்கப்பட வேண்டுமென்று அறிவித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.  இது குறித்து சிஐடியு மூலம் கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும், நிர்வாகம் குறைந்தபட்ச கூலியான ரூபாய் 385 வழங்க மறுத்து வருகிறது. ஆகவே, ஆட்சியர், குறைந்தபட்ச கூலியை வழங்க உத்தரவிட்டு, வறுமையில் உள்ள தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்டக் குழு உறுப்பினர் இராமலிங்கம், துப்புரவு தொழிலாளர்கள் உட னிருந்தனர்.

;