tamilnadu

img

ராஜராஜன் பள்ளியில் விழா

தஞ்சாவூர், மார்ச் 4-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  உடையநாடு - வீரியங்கோ ட்டை ராஜராஜன் பள்ளியில் இஸ்லாமிய கலாச்சார விழா  நடைபெற்றது. ஊமத்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் என்.குலா ம்கனி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் மனோ ன்மணி ஜெய்சங்கர் வரவே ற்றுப் பேசினார். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர், தொழிலதிபர் ஏஷியன் ஹெச்.சம்சுதீன் சிறப்பு விரு ந்தினராக கலந்து கொண்டார். பேராவூரணி வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, அரபிக் பாட ஆசிரியர்கள் மவ்லவி ஏ.ப ஹாவுதீன், முகமது முஸ்தபா  அன்வரி மற்றும் ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.