கும்பகோணம் ஜூலை 30- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் உலக பிரசித்தி பெற்ற பித்தளை குத்துவிளக்கு உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும். இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் விளக்கு கள் ஆகமவிதிப்படி செய்யப்பட்ட தாகவும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. இத்தொழிலில் நாச்சியார் கோயில் பகுதியில் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் ஆண் பெண் என 4000 தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள். இவர்கள் குடிசை தொழி லாக தன் உடல் உழைப்பால் பிரத் யேகமாக பித்தளை குத்துவிளக்கு உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் குத்துவிளக்கு தொழிலையே நம்பி இருப்பதால் தொடர்ந்து குத்துவிளக்கு உற் பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசு ஜிஎஸ்டி போன்ற வரிவிதிப்புகளி னாலும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தினால் தொடர்ந்து தொழிலை செய்ய முடியாமல் இருந்து வந்த னர். இந்நிலையில் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு வியாபாரி களிடம் சாதாரண விளக்குகளுக்கு 75 சதவீதமும் எடை விளக்கு களுக்கு 50 சதவீத கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். திங்களன்று குத்து விளக்கு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் வியாபாரி சங்கம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது இதில் உடன் பாடு ஏற்படாததால் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றாடம் குத்து விளக்கு உற்பத்தியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வருமா னம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு தலையிட்டு உற்பத்தியாளர்களுக்கும் வியா பாரிகளுக்கும் சமரச தீர்வு ஏற்பட்டு உற்பத்தியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி உற்பத்தியா ளர்களின் வாழ்வாதாரத்தை உறு திப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.