tamilnadu

img

புத்தக விற்பனையில் சாதனை....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாள் மற்றும்அண்ணா பிறந்த நாளையொட்டி இந்தாண்டு புத்தக விற்பனையை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி துணைவேந்தர் துவங்கி வைத்தார்.

புத்தகம் அதிகளவில் விற்ற நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரைவிற்பனை நாள் நீட்டிக்கப்பட்டது.கடந்த ஆண்டு சராசரியாக 2.75 லட்சமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந் தாண்டு சாதனையாக 17.50 லடசம் ரூபாய் அளவிற்கு விற் பனை நடந்தது. இது குறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் கூறுகையில், தமிழ் பல்கலைக்கழக பதிப்பு துறை அரண்மனை வளாகத்தில் இருந்து தற்போது பல்கலைக் கழகத்திற்கு மாற் றப்பட்டு விட்டது. சென்ற ஆண்டுபுத்தக விற்பனை 2.75 லட்சம்ரூபாய்க்கும், தமிழ் புத்தாண் டின் போது 2.23 லட்சத்திற்கும் புத்தகம் விற்பனையானது. இந்தாண்டு வாட்ஸ்அப்பில் புத்தகம் விற்பனை தொடர்பாக தமிழ் அறிஞர்கள், புத்தக வாசகர்கள் என பல தரப்பிலும் சென்றடைந்தால், விற்பனை அதிகப்படியாக இருந்தது. மேலும் புத்தகம் வாசிப்பு மக்கள் மத்தியில்கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது எனக் கூறலாம். குறிப்பாக செம்மொழி என்ற இலக்கணம், இலக்கியம் ஒன் றாக அடங்கிய புத்தகம் 3,500 பிரதிகள் முழுவதும் விற்பனை செய்து முடிக்கப்பட்டு விட்டது.

பல்கலைக்கழகப் பதிப்புத் துறை வெளியீடுகளை மறுபதிப்பு செய்வதற்காக தமிழக அரசு வழங்கியுள்ள 2 கோடி ரூபாயும், பல்கலைக்கழக மானியக்குழு நல்கையில் 13 லட்சம்ரூபாய்க்கான புதிய நூல்கள்அச்சிடும் பணிகள் கொரோனாவால் தடைப்பட்ட நிலையிலும், இம்மாத இறுதிக்குள் அச்சுப் பணி முடிந்து இந்நூல்களும் விற்பனைக்கு வரவுள்ளன” என்றார்.