தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மார்ச் 9 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இதில் ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் (தொழுநோய்) மருத்துவர் குணசீலன் தலைமை வகித்தார். வட்டார தலைமை மருத்துவர் இந்தி ரா முன்னிலை வகித்தார். முகாம்களில் துணை இயக்குனர் தொழுநோய் அலுவலக ஆய்வாளர் கண்ணன் குழுவினரால் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பர். மேலும் மருத்துவர் ராஜராஜன் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழு செயல் படும். முகாம் ஒருங்கி ணைப்பு பணிகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் திருப்பதி, சுரேஷ்குமார் ஆகி யோர் செய்து வருகின்றனர்