tamilnadu

தஞ்சை: ஒருவருக்கு கொரோனா தொற்று

 தஞ்சாவூர், மே 31- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் அருகே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குரு விக்கரம்பை ஊராட்சி முனுமாக்காடு கிரா மத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவர் சென்னை தி.நகரில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை வீட்டில் தனிமைப் படுத்தினர்.  இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் அறிவுறுத்தலின் படி, சுகாதாரத் துறையினர் அவருக்கு சளி மாதிரி எடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சனிக்கிழமை மாலை வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோ னாத் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் க. ஜெயலெட்சுமி தலைமையில், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை 108 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து அப்பகுதியில், ப்ளீச்சிங் பவுடர், மருந்து தெளித்தல் மற்றும் அரசின் புதிய விதிமுறைப்படி 500 மீட்டர் சுற்றள வில் தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட பாது காப்பு ஏற்பாடுகளை செய்தனர்.