தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கு.சின்னப்பன் கூறிய தாவது, பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களிலி ருந்து, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முறை யாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். பல்கலைக் கழகப் பேரவையில் இவர்க ளது பதவிக் காலம் 07.05. 2020 முதல் மூன்றாண்டுகள் அல்லது சட்டமன்ற உறுப்பி னர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை பேரவை உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள் என்றார்.