tamilnadu

img

அனக்குடி தோழர் டி.காமராஜ் காலமானார்

கும்பகோணம், நவ.19- தஞ்சை மாவட்டம் திருவிடைமரு தூர் வட்டம் அனக்குடியைச் சேர்ந்த தோழர் டி.காமராஜ் (51) உடல் நலக் குறைவால் காலமானார்.  அவர் சிறு வயதிலிருந்தே வாலிபர் சங்கம் சிபிஎம் வளர்ச்சிக்கு செயல்பட்ட வர். திருவிடைமருதூர்,திருப்பனந்தாள், கும்பகோணம் ஒன்றியக் குழுவின் உறுப்பினராக இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் விவசாயிகள் சங்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்.  தோழரின் மறைவுச் செய்தி அறிந்து கும்பகோணம் அருகே உள்ள அனக்குடி அழகிரிநாதன் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.சீனிவாசன், தஞ்சை மாவட்ட செயலாளர் கோ. நீலமேகம், செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். மனோகரன், சின்னை.பாண்டியன், சி. ஜெய பால், செந்தில்குமார், வி. கண்ணன் மாவட்ட குழு உறுப்பி னர் நாகராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் பி. ஜேசு தாஸ், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு, குடந்தை ஒன்றிய குழு உறுப்பினர் செல்வமணி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.