tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி சிபிஎம் உட்பட அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு

கும்பகோணம், ஜன.30-  குடியுரிமைச் சட்டத் திருத்தம், குடி யுரிமைப் பதிவேடு அமலாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பா டுகளைக் கண்டித்து மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்திருந்த மனிதச் சங்கிலி போராட்டம் கும்பகோணம் பகுதியில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பு கள், ஓய்வூதியர் சங்கம், மாதர் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்க ணக்கில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், நகர செயலாளர் கே செந்தில் குமார், ஜமாத்தார்கள் மக்கள் சபை மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ் மன்பயி,  கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமர்த சாமி, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சு கல்யாணசுந்தரம், குடந்தை எம்எல்ஏ அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன் மனிதநேய மக்கள் கட்சி முகமது செல்லப்பா ராஜ் முஹம்மது, இந்திய காங்கிரஸ் கட்சி டிஆர் லோகநாதன், எஸ்டிபிஐ குடந்தை இப்ராஹிம் இந்திய தவ்ஹீத் ஜமாத் ரஹமத்துல்லா, திராவிடர் கழகம் கௌதமன் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இமாம் அலி மக்கள் அதிகாரம் ஜெய பாண்டியன் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி விவேகா னந்தன் பாலசுப்பிரமணியன், மதிமுக நகர செயலாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வம் உள்ளிட்ட அனைத்து கட்சி கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி ஜெயபால், ஒன்றிய செயலாளர் சா ஜீவபாரதி மற்றும் அனைத்து முஸ்லிம் அமைப்பினர், அனைத்துக் கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா சாலையில் இருந்து துவங்கி பழைய பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்ட செயலா ளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், சி.ஜோதிபாசு, கே. தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.பி. கே.பாண்டியன், கே.வி.ராஜேந்திரன், எஸ். சாமிநாதன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் மற்றும் ஜமாத் தலைவர்கள் இக்பால், யாசின் உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை அறந்தாங்கி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 3000 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 
பாபநாசம்
பாபநாசத்தில், மனிதச் சங்கிலி போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், ஒன்றிய செயலாளர் காதர் உசேன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
புதுக்கோட்டை
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மனித சங்கிலிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக இலக்கிய அணி செயலாளர் முன்னாள் எம்எல்எ கவிதைப்பித்தன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகரன், நகரத் தலைவர் ஏ.எம்.எஸ்.இப்ராஹிம்பாபு, ஜி.எஸ். தனபதி, விசிக நகரச் செயலாளர் அண்ணாத் துரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எஸ்.நியாஸ்அகமது, ஆம்ஆத்மி அப்துல்ஜபார்,  அகில இந்திய மஜ்ஜிலிஸ் கட்சி ஏ.ஆர். சுல்தான்தேவ்பந்தி, எஸ்.டி.பி.ஐ. காசிநாத துரை, தமுமுக மாவட்டச் செயலாளர் மு.நிஜா முதீன், எம்ஜேகே மாவட்டச் செயலாளர் இ.முபாரக்அலி. இஸ்லாமி இளைஞர் பேரவை ஜெ.ராஜாமுகமது, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    மக்கள் ஒற்றுமை மேடையின் பொன்ன மராவதி ஒன்றிய பொறுப்பாளர் என்.பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி யில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் நாகூர் கனி, திராவிடர் கழகத்தின் ஆசை தம்பி, காங்கிரஸ் கட்சியின் தொட்டியபட்டி ஊராட்சி தலைவர் சோலையப்பன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல கோட்டைப்பட்டினம், கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளி லும் மனித சங்கிலி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.                                                                                                                                               தரங்கம்பாடி
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மனித சங்கிலிக்கு அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், சி.வி.ஆர்.ஜீவானந்தம், எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், வட்ட செயலாளர் மேகநாதன், சிங்காரவேலன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரன், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் அப்துல் சாதிக், எஸ்டிபிஐ மாவட்ட பொது செயலாளர் எம்.ஜே ரஃபி, தமுமுக மாவட்ட பொருளாளர் பாசித் மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், நீடூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
குளித்தலை
கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் போராட்டம் காந்தி சிலை முதல் சுங்ககேட் வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
பெரம்பலூர்
பெரம்பலூரில் நடைபெற்ற மனித சங்கிலிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். மாநிலக்குழு எம்.சின்னதுரை, பால் உற்பத்தியாளர் சங்கம் முகமதுஅலி சிறப்பு ரையாற்றினர். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் எம்.சேகர் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் எஸ்.ராமசாமி,  சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலாளர் எம்.பால சுப்ரமணியன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, திமுக ஒன்றிய செயலாளர் ஏ.தேவா, மதிமுக மாநில துணைச் செயலாளர் கூடூர்.சீனிவாசன், காங்கிரஸ் தலைவர் வி.ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஜி பர்ரகுமான், நகர செயலாளர் ஏ.பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இஸ்லா மிய சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஜமாத் நிர்வாகிகளும் உணர்வு பங்கேற்றனர்.  வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகம்மது உதுமான், மாவட்ட தலைவர் ஏ.சலாவுதீன், மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் நாகூரிலிருந்து வாஞ்சூர் வரை நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாகை- நாகூர் இஸ்லாமியப் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.ராஜேந்தி ரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலை வர் சு.சிவகுமார், அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ண மூர்த்தி மற்றும் எஸ்.ஆர்.ராஜேந்திரன், பி.முனியாண்டி, பி.ஆசைத்தம்பி, டி தினேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டங்களில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;