tamilnadu

70 நாட்களுக்கு பிறகு  கொரோனா இல்லா குடந்தை  

கும்பகோணம், ஜூன் 4 -  தஞ்சை மாவட்டத்தில்  ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நகராட்சி சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 50க்கும் மேற்பட்ட கடைகளில் மாஸ்க் கையுறைகளை அணியாம லும் கிருமி நாசினி மற்றும் கைகளை கழுவ தண்ணீர்  இல்லாமல் இருந்ததை யொட்டி அபராதம் விதிக்கப்பட்டது  இதுகுறித்து நகர்நல அலுவலர் பிரேமா கூறுகை யில், கும்பகோணம் நகராட்சி  பகுதிகளில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் தனி மைப்படுத்தப்பட்டு இருந்த னர். சிகிச்சைக்குப்பின் 13வது நபரும் வீட்டிற்கு  அனுப்பி வைக்கப்பட்டார். எனவே கும்பகோணம் நக ராட்சி 70 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லா நகராட்சியாக முன்னேறி உள்ளது என தெரிவித்தார்  மேலும் இந்நிலை நீடிக்க பொதுமக்கள் வியாபாரிகள் தொற்றுநோய் பரவாமல் இருக்க மாஸ்க், கையுறை கள் தனிநபர் இடைவெளி கை கழுவுதல் உள்ளிட்ட நட வடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.