tamilnadu

img

போல் வால்ட் (உயரம் தாண்டுதல்) நீங்களும் சாதிக்கலாம் - சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பி யன்ஷிப் தொடர்களில் போல் வால்ட் (POLE VAULT) என்ற பெயரில் உயரம் தாண்டுதல் போட்டியைப் பார்த்திருப்பீர்கள். அந்த விளையாட்டைப் பார்க்கும் பொழுது இது சாகசம் போன்று இருக்கும். இந்த விளையாட்டு நம்மால் விளையாடுவது கடினம் என்று நினைக்கக்கூடும். உண்மை யில் அது மிக எளிதான விளையாட்டு தான். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.  முதலில் அந்த விளையாட்டில் பயன் படுத்தப்படும் போல் (POLE) என்ற குச்சி வடிவிலான விளையாட்டு சாதனத்தை பார்ப்போம். முற்காலத்தில் மூங்கில் வைத்துத் தான் உயரம் தாண்டினர். ஆனால் தற்போதைய நவீனக் காலத்தில் நாம் உயரம் தாண்ட பயன்படுத்தும் அந்த சாதனத்தைப் பார்த்தால் குழாய் (பைப்) போன்று இருக்கும். உண்மையில் அது குழாய் இல்லை, ஒரு வகை இழை போன்ற துணி தான். அது நமக்கு அடிபட்டால் காயத்திற்கு ஒட்ட பயன்படுத்தப்படும் பேண்டேஜ் (BANDAGE) துணி போன்று இருக்கும். இதனை இரும்பு குழாயில் சுற்றி வெப்பப் படுத்துவார்கள்.பின்பு உள்ளிருக்கும் இரும்பு குழாயை எடுத்துவிட்டு இயந்திரம் மூலம் வளைப்பார்கள். 

இப்படி தான் போல் உருவாகுகிறது. இந்த போல் வளையும் விசைக்கு ஏற்ப நாமும் வளைந்தால் மேலே தூக்கி விடும். சற்று அசந்தால் தூக்கி வெளியே எறிந்துவிடும்.  இவ்வளவு தான் இந்த உயரம் தாண்டு தல் விளையாட்டு. இதனை இந்திய இளசுகள் கடினமானது என நினைத்து கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் பிரான்ஸ், ஜெர் மனி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த இளசுகள் இந்த விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் இருப்பதால் ஒலிம்பிக் தொடரில் சாதிக்கிறார்கள். 

எந்தவகை விளையாட்டாக இருந்தாலும் பயிற்சி பெறுவது தான் கடினம்... ஆனால் சாதிப்பது எளிது...