tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி...  பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சி... 

பாரீஸ் 
கொரோனாவின் பரவல் காரணமாக கடந்த 7 மாதம் விளையாட்டு உலகம் முடங்கி கிடக்கிறது. சில நாடுகளில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும் முன்னைப்போல் இல்லாமல் சாதாரண தொடரைப் போன்று நடத்தப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற சர்வதேச தொடர்களுக்கு ரசிகர்கள் இல்லாமல் அனுமதி வழங்ப்பட்டது. இதனை பின்பற்றி அமெரிக்க டென்னிஸ் சம்மேளனம் ரசிகர்கள் இல்லாமல் சின்சினாட்டி டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரையும் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், களிமண் தரை அமைப்பை கொண்ட சர்வதேச கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 27-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு பார்வையாளர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா 2-வது அலையை தொடங்கியுள்ள நிலையில், பிரெஞ்சு ஓபன் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட விஷயம் பிரான்ஸ் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

;