tamilnadu

img

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி....  விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து 

லண்டன் 
பிரிட்டனில் (இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ்) கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்  அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 4000-க்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டு ஒரேநாளில் 569 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பிரிட்டனின் தலைநகராக கருதப்படும் இங்கிலாந்து பலத்த சேதாரத்தைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில் டென்னிஸ் உலகின் பழமையான கிராண்ட்ஸ்லாம் தொடரான  விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து டென்னிஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 1887-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 134-வது சீசன் வரும் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடத்தப்பட இருந்தது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸால் இந்த தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

143 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது. அதன்பின் எவ்வித சிக்கல் இல்லாமல் 1945-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை சிக்கல் இல்லாமல் நடைபெற்ற நிலையில் கொரோனாவின் தாக்கத்தால் தற்போது நடத்த முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.
 

;