tamilnadu

img

ஜார்ஜ் பிளாய்ட் மரணம் :   இனவெறிக்கு எதிராக களமிறங்கும் டென்னிஸ் நட்சத்திரங்கள்...  

வாஷிங்டன்
அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற நபரை மினியாபொலிஸ் நகர் போலீசார் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்தனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு நீதி கோரி கருப்பின மக்கள் மட்டுமின்றி அமெரிக்காவில் வாழும் அனைத்து தரப்பினரும் கொரோனா ஊரடங்குகளை பற்றி கண்டுகொள்ளாமல் 8 நாளாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் மரணம் தொடர்பாக எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில், இன அநீதிக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரம் நடத்தும் வகையில் #BlackOutTuesday என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த ஹேஸ்டேக் டாப் அர்டரில் டிரெண்டிங் ஆகி வரும் நிலையில், ஆண்கள் டென்னிஸ் உலகின் பிக் - 3 (big - 3) என அழைக்கப்படும் ரோஜர் பெடரர்(சுவிஸ்), ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் இணைந்து உள்ளனர். 

மேலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நட்சத்திர டென்னிஸ் வெற்றியாளர்களான மரியா ஷரபோவா (ரஷ்யா), பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மற்றும் ஸ்டான் வாவ்ரிங்கா (சுவிஸ்) ஆகியோரும் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து உள்ளனர். 

;