tamilnadu

img

சின்சினாட்டி டென்னிஸ்... முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேற்றம்....   

நியூயார்க் 
மகளிருக்கான சின்சினாட்டி டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கொரோனா பரவலால் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காத இந்த தொடரில் தற்போது 3-ஆம் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இன்று (ஆக., 24) நடைபெற்ற ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், அதிரடி நாயகியுமான பிளிஸ்கோவா (செக் குடியரசு), சக நாட்டு வீராங்கனையான  வெரோனிகாவிடம் 5-7,4-6 செட் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

இதே போல உள்ளூர் நாயகியான கெனின் (அமெரிக்கா), பிரான்சின் கோர்னெட்டிடம் 1-6, 6-7 (7-9) என்ற செட் கணக்கில் தோல்விகண்டு தொடரிலிருந்து வெளியேறினார். கெனின் உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;