tamilnadu

img

அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பட்டியல்

பி.வி.சிந்துவிற்கு 13-வது இடம்

பிரபல கணக்கெடுப்பு இதழான அமெரிக்காவின் போர்ப்ஸ் உலக விளையாட்டு வீராங்கனைகளில் அதிக சம்பளம் பெறும் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. 
இந்த பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆண்டிற்கு  5.5 மில்லியன் டாலர் (ரூ.38 கோடி) வருமானம் ஈட்டி 13-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் அதிக வருமானம் பெரும் விளையாட்டு வீராங்கனையாகச் சிந்து மாறியுள்ளார். முதலிடத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (29.2 மில்லியன் டாலர் - ரூ. 206 கோடி), ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா 24.3 மில்லியன் டாலருடன் (ரூ.172 கோடி) இரண்டாவது இடத்திலும், அதிரடிக்கு பெயர் பெற்ற ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 11.8 மில்லியன் டாலருடன் (ரூ.82 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளார்.  
21 வயதாகும் ஜப்பானின் ஒசாகா சர்வதேச டென்னிஸ் விளையாட்டிற்கு வந்து ஏறக்குறைய 2 ஆண்டுகள் கூட ஆகாது. அதற்குள் போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;