ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் தாய்கட்ஸு என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் -வீராங்கனைகள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் மட்டும் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜப்பானின் கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார். பேட்மிண்டன் உலகின் முதல் நிலை வீரரான மொமோடா தொடக்கம் முதலே டிராப் ஷாட்களில் சாய் பிரணீத்தை திணறவைத்தார். இறுதியில் 21-12, 21-15 என்ற செட்கணக்கில் மொமோடா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை கென்டோ மொமோடா எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.