tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

ஆடவர் ஒற்றையர் 
 

ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் பாஃக்நினி, அர்ஜெண்டினாவின் டெல்போனிசை 6-3, 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் போராடி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் காட்சநோவ் பிரான்சின், பார்ரிரேவை 6-3,7-6(8-6),0-6,7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் காட்சநோவ் வெற்றி பெற கடும் சிரமத்துக்குள்ளனர்.ஸ்பெயினின் பாடிஸ்டா அகுட், பிரான்சின் மோன்பில்ஸ், குரோஷியாவின் காரிச் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  

மகளிர் ஒற்றையர்

மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிரடிக்குப் பெயர் பெற்ற உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பிளிஸ்கோவா, தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மாட்ரிச்சிடம் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்து டென்னிஸ் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த பிளிஸ்கோவாவின் புகழுக்குப் பலத்த சேதாரம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்- கனை நவரோவை தர வரிசை பின்புலம் இல்லாத வென்ட்ரோ வோசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பந்தாடினார்.