tamilnadu

img

கோபா டெல் ரே கால்பந்து.... பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அவுட் 

மாட்ரிட் 
ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து தொடரான லா லிகா தொடரில்  விளையாடும் முன்னணி அணிகளும், மற்ற லீக் தொடர்களில் உள்ள 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலையில் சிறப்பாக விளையாடும் அணிகளும் என ஒன்றாக சேர்த்து ஆண்டுதோறும் கோபா டெல் ரே என்ற பெயரில் நாக் - அவுட் சுற்று தொடர் நடைபெற்று வருகிறது.

பிரசித்திபெற்ற இந்த தொடரின் நடப்பாண்டு சீசனின் காலிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து  வெளியேறியது. உலகத் தரம் வாய்ந்த வீரரான மெஸ்ஸி கேப்டனாக பணியாற்றும் பார்சிலோனா அணி அத்லெடிக் பில்பாவோ அணியிடம் 1-0 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. ரொனால்டோ வளர்த்து விட்ட ரியல் மாட்ரிட், ரியல் சோசிடாட் அணியிடம் 4-1 என்ற கணக்கில் படுதோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. அதிர்ச்சி தோல்வி கண்ட இரு அணிகளும் உலகில் சிறந்த கிளப் அணிகளாகப் பெயர் பெற்றவை என்பதால் அந்த அணிகள் காலிறுதியோடு வெளியேறியது கால்பந்து ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரொனால்டோ இல்லாததால் ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தது எனக் கூறலாம். ஆனால் மெஸ்ஸி இருந்தும் பார்சிலோனா தோற்றது தான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.