tamilnadu

img

24 நாடுகள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ்

இன்று தொடக்கம்

டென்னிஸ் விளையாட்டில் புதுவகை தொடரொன்று நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது.  அதாவது டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரர்களை உள்ளடக்கிய (ஆடவர் மட்டும் - 750 புள்ளிகள் கைவசம் இருக்க வேண்டும்) 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் ஏடிபி - 24 கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சீசன் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான பிரிஸ்பேன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் வெள்ளியன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 24 அணிகளும் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

9 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் முதல் 6 நாட்கள் லீக் (ரவுண்ட் ராபின்)  போட்டிகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்றும், 9,10-ஆம் தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், 11-ஆம் தேதி அரையிறுதியும், 12-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் பரிசுத் தொகை ரூ.106 கோடி ஆகும்.

‘ஏ’ பிரிவு- செர்பியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, சிலி
‘பி’ பிரிவு-ஸ்பெயின், ஜப்பான், ஜார்ஜியா, உருகுவே  
‘சி’ பிரிவு -பல்கேரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, மால்டோவா 
‘டி’ பிரிவு-ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா, நார்வே 
‘இ’ பிரிவு-ஆஸ்திரியா, குரோஷியா, அர்ஜெண்டினா, போலந்து  
‘எப்’ பிரிவு-ஜெர்மனி, கிரீஸ், கனடா, ஆஸ்திரேலியா

இந்தியா உள்ளதா?

ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் வலுவான பார்மில் யாரும் கிடையாது என்பதால் இந்த தொடரில் இந்தியா இடம்பெறவில்லை. அதே போலத் தனிப்பட்ட காரணத்திற்காக ரோஜர் பெடரர் இந்த தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளதால் சுவிட்சர்லாந்து அணி தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தது. 

;