tamilnadu

img

தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றை மதுபானம் அழிக்கும்.... கடைகளைத் திறக்க காங்,. எம்.எல்.ஏ. கோரிக்கை

ஜெய்ப்பூர்:
தொண்டையில் இருக்கும் வைரஸைஅழிக்க, மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  பாரத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்யாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தொண்டையில் இருக்கும் வைரசை அழிக்க, மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காங். சட்டமன்ற உறுப்பினர் பாரத் சிங் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "தொடர் ஊரடங்கால், மாநிலம் முழுவதும் சட்டவிரோத வியாபாரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால், மாநில அரசு, கடும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. புழக்கத்தில் உள்ள மோசமான மதுபானம் காரணமாக மக்கள், பெரும் சுகாதார ஆபத்தில் இருக்கின்றனர். அரசுக்கும், மக்களுக்கும் உதவுவதற்காக, மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்' எனக் கடிதம் எழுதியுள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், ஆல்கஹால் கொண்டு கைகழுவுவதால் கொரோனா வைரஸ் அழிவது போல், ஆல்கஹாலை அருந்துவது நிச்சயமாக தொண்டையில் இருக்கும் வைரஸை அழிக்கும். போலி மது அருந்துவதை விட இது மிகவும் சிறந்தது, என்றார். இந்தியில் எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ட்வீட் செய்துள்ளது.
 

;