tamilnadu

கோரிக்கைகளை நிறைவேற்ற ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

மதுரை:
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மதுரை மாவட் டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், “ஜாக்டோ-ஜியோ போராட்டம்நடைபெற்று இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் 5,100க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட 70-பி குற்ற குறிப்பாணை, முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் கால வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பிசெவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறைஊதியம் பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், கே.பி.ஓ. சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சந்திரன், கே.நீதிராஜா, எம்.பொற்செல்வன் ஆகியோர் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.நீதிபதி, திருப்பரங்குன்றம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.மூர்த்தி , சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிதருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.