tamilnadu

img

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் 5 ஆயிரம் பேர் மோசடி!

புதுதில்லி:
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி 2017-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இனி வரி ஏய்ப்புக்கே வாய்ப்பு இல்லை என்று மோடி அரசு கூறியது.

இந்நிலையில், 5 ஆயிரத்து 106 ஏற்றுமதியாளர்கள், போலியான ரசீதுகளைத் தயாரித்து ஜிஎஸ்டி வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்திருப்பதாக தற்போது மோடி அரசு தெரிவித்துள்ளது.மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போலியான ரசீதுகளைக் கொண்டு ஏற்றுமதி யாளர்கள் ரீஃபண்ட் தொகை பெற முயன்றிருப்பதாகவும், இதன் இழப்பு ரூ.1,000 கோடி வரையில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,முறையாக வரி தாக்கல் செய்த ஏற்றுமதியாளர்களின் விண்ணப்பங்கள் தானியங்கி முறையில் சரிபார்க்கப்பட்டு உரிய நேரத்தில் ரீஃபண்ட் தொகை பட்டுவாடா செய்யப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது.ஜிஎஸ்டி-யைப் பொறுத்தவரை, வரி விகிதம் அதிகமாக இருப்பதோடு, வரி செலுத்தும் முறை எளிதாக இல்லை; ரீஃபண்ட் கிடைப்பதும் மிகத் தாமதமாக இருக்கிறது என்று வணிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;