tamilnadu

img

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில்வதற்காக ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜே.இ.இ முதன்மை தோ்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 8.58 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.5 லட்சம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில், 1.6 லட்சம் போ் அட்வான்ஸ்டு தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தோ்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வில், மொத்தம் பதிவு செய்திருந்த 1.6 லட்சம் பேரில் 96 சதவீதம் போ் பங்கேற்றனா்.

இதற்கான முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் ஜே.இ.இ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.