tamilnadu

img

ஆறு விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் நிறுத்தம்!

புதுடெல்லி: 
எரிபொருள் வாங்கியதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாத காரணத்தால் 6 விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை ஏர் இந்தியா அதிகாரி உறுதி செய்துள்ளார். 

இந்தியாவின் பொத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமையில் சிக்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து அந்நிறுவனத்துக்கு போதிய உதவி கிடைக்காததால் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஏர் இந்தியா விமானிகளுக்கு சம்பளம் வழங்குதில் தாமதமும் ஏற்பட்டு வருகிறது. 

;