tamilnadu

img

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வாலிபர் சங்கம் விழிப்புணர்வு பிரச்சாரம்

சேலம், மே 4-கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் அறிந்து கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் சேலம் மாநகர் கிழக்கு குழு சார்பில் நடைபெற்றது.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் படிஅனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். இந்தசட்டம் பொதுமக்கள் மத்தியில் முழுமையாக சென்றடைய வில்லை ஆகவே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தனியார் பள்ளிகள் இந்தசட்டத்தை மறைத்து மாணவர்களை சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது. இந்நிலையில் சனியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகர கிழக்கு குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன், மாநகர கிழக்கு செயலாளர் பெரியசாமி, தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

;