tamilnadu

img

கல்பாரப்பட்டி ஊராட்சியில் மாயமான வாக்குகள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

 இளம்பிள்ளை, ஜன. 8-  கல்பாரப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு பதி வான வாக்குளில் 1260 வாக்குகள் மாயமானது தொடர் பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வேட்பாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டது. வீரபாண்டி ஒன்றிய பகுதியில் 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பத விக்கும் , 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 25 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், 219 வார்டு உறுப்பி னர்கள் பதவிக்கும் ஆக மொத்தம் 264 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 170 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்  இந்நிலையில் கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3,850 வாக்குகள் பதிவாகி இருந் தன. ஆனால் அறிவித்த வாக்குகளில் தலைவர் பத விக்கு 1,260 வாக்குகள் குறைவாக 2,590 வாக்குகள் பதி வாகி உள்ளன என்று வீரபாண்டி ஒன்றிய அலுவல கத்தில் வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட் டுள்ளன . இதனை பார்வையிட்ட வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்த தகவல் கிடைத்த கல்பரப்பட்டி ஊராட்சி  பகுதியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பா ளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 1260 வாக்கு களை காணவில்லை என புகார் தெரிவித்தார். அந்த புகாரை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாகக் கூறி  செவ்வாயன்று இரவு 20க்கும் மேற்பட்டோர் வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேரங்கன் தங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். அதன் பின்பு அங்குள்ள கணினியில் பதிவு செய்யப்பட்டதில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கூறி சுமார் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை வாக்குச்சாவடி வாரியாக என்ன  பட்டவை ஆய்வு செய்த பின்பு கணினியில் பதிவேற் றம் செய்யாமல் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முற்றுகையிட்ட அவர்களிடம் வாக்கு வித்தியா சத்தை சரிசெய்யப்பட்டு அலுவலகத்தின் வெளியே ஒட்டப்படும் என அறிவித்தார். இது மாதிரியான குளறு படி வேறு ஊராட்சி பகுதியில் உள்ளதா என கணினி யில் பதிவேற்றம் செய்த பணியாளர்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் படி அறிவுரை வழங்கினார். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேட் பாளர்கள் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையில் மறைமுக குளறுபடி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வை யாளரிடம் முறையிட்டு கல்பரப்பட்டி ஊராட்சி பகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரி வித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் இப்பகுதி யில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

;