சேலம், ஜன.5- சேலத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் சனியன்று துவங்கியது. சேலத்தில் 3,226 வாக்கு சாவடி மையங்களில் வாக் காளர் பெயர் சேர்த்தல், திருத்தல்பணிகளை மாவட்ட ஆட்சியர்சி.அ. ராமன் தொடங்கி வைத் தார். தமிழகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் நடைபெறுகிறது. சேலத்தில் ராமகிருஷ்ணா சாலையிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. வாக்காளர் சிறப்பு முகாமினை மாவட்டம் ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார். இதில் சேலத்தில் 1163 சிறப்பு முகாம்களில் 3,226 வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிறன்றும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.