tamilnadu

img

சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்

சேலம், ஜூன் 7- சேலத்தில் ரூ.450.77 கோடி மதிப்பிலான இரண்டு அடுக்கு மேம்பா லத்தையும், 17 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தமிழக முதலமைச்சர் எடப் பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  அரசு விழாக்களில் பங் கேற்க சேலம் மாவட்டத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் வெள்ளியன்று சேலம் மாவட்டம் 5 ரோடு சந்திப்பில் ரூ.447 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு மேம்பாலம் பணியின் ஒரு பகுதியான ஏ.வி.ஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். மேலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை மூலம் ரூ.6 கோடி மதிப்பி லான பணியையும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணியையும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் ரூ.23 லட்சம் மதிப்பிலான பணியையும், தாட்கோ மூலம் ரூ.18.8 கோடி மதிப்பிலான பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.10.6 கோடி மதிப்பிலான ஒன்பது பணிகள் மற்றும் வருவாய்த்துறை மூலம் ரூ.29.73 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.450.77 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான பணி, நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  மூலம் ரூ.1.20 கோடி மதிப்பிலான 67 பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.42 லட்சம் மதிப்பிலான பணியும் என ரூ.17.40 ஒரு கோடி மதிப் பிலான 69 புதிய திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

;