tamilnadu

img

நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் அவலம் சாலை வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் கோரிக்கை

சேலம், செப்.9- ஏற்காடு அருகே கொடிக்காடு கிராமத் தில் சாலை வசதி இல்லாததால் நோயாளி களை தொட்டில் கட்டி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி  கிளியூர் நீர்வீழ்ச்சி அருகில் அமைந்துள்ளது கொடிக்காடு கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பொது விநியோக குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. ஆனால் இன்று வரை சாலை வசதி மட்டும் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் நோய் வாய்ப்பட்டாலோ, கர்ப்பிணிகளை பிரசவ  காலங்களில் தொட்டில் கட்டியே மருத்துவம னைக்கு தூக்கி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதேபோல், ஏற்காடு பஞ்சாயத்து முன்டகாம்பாடி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு  அடர்ந்த காடு வழியாக பல மைல் நடந்தே சென்றே ரேசன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில், புதனன்று காலை அக்கி ராமத்தில் ஒரு முதியவர் நோய்வாய்ப்பட் டுள்ளார்.

அப்போது அவரை மருத்துவ மனையில் சேர்ப்பதற்காக தொட்டிலில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். அவரை எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத ளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மேலும், கிளியூர் நீர்வீழ்ச்சி வரை சாலை  உள்ளது. அதை தனியார் எஸ்டேட் உரிமை யாளர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டு, இப்பகுதி மக்களுக்கு வழி விடுவதில்லை. எனவே, அங்கு உள்ள சாலையை அரசு மீட்டு சாலை வசதி  செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

;