சேலம் பெரமனூர் பகுதியில் இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையான உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம் அமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் பெரமனூர் கிளை சார்பில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது, விரைவில் அதற்கான இடம் தேர்வுசெய்து அமைத்து தருவதாக அவர் உறுதியளித்தார். இதில் வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர துணை செயலாளர் ராமச்சந்திரன், மாநகர குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.