tamilnadu

பெரிய கொல்லபட்டி ஜி.ராமகிருஷ்ணன் மறைவு

 சாத்தூர், ஜூலை. 4- சாத்தூர் ஒன்றியம் பெரிய கொல்ல பட்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன் என்ற கிருஷ்ணசாமி(74) உடல் நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1980ல் இணைந்த ராமகிருஷ்ணன், பெரிய கொல்லபட்டியின் கிளைச் செயலாளர், வட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க வட்டத் தலைவர் ஆகிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றியுள்ளார்.  அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.விஜய முருகன், பி.என்.தேவா, வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பா ராஜ், எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய செய லாளர் எஸ்.சரோஜா ஆகியோர் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர்.