tamilnadu

img

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மத்திய தொழிற்சங்கத்தினர் தேர்தல் பிரச்சாரம்

சேலம், ஏப் 13-சேலம் நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சனியன்று சேலம் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பால் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் எல்பிஎப் நிர்வாகி பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இப்பிரச்சாராத்தில் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஆலைகள் மூடல், வேலை இழப்புகள், பணமதிப்பு நீக்கத்தால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் பாதிப்பு. சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட பாதிப்பால் நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இதனை கண்டித்தும் இதற்கு காரணமான மோடி அரசை மீண்டும் இந்தியாவின் பிரதமராக அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களை படிப்படியாக அகற்றிவிட்டு ஒப்பந்தங்கள், பயிற்சியாளர், என்ற பெயரில் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதை கண்டித்தும், மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி எனவும் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


மேலும் மோடி அரசால் தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டு எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். கட்டுமானம், ஆட்டோ, தையல், சுமைப்பணி மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவைகளை கடுமையாக்கியதை கண்டித்தும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்துசேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் பிரச்சாரத்தில் சேலம் மாவட்டம் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொண்டனர்.இதில், சிஐடியு மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி, மாவட்டசெயலாளர் டி.உதயகுமார், ஏஐடியுசி நிர்வாகி விமலன், ஐஎன்டியுசிநிர்வாகி வடமலை, எச்எம்எஸ் நிர்வாகி கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;