tamilnadu

img

தனிமைப்படுத்துவதாகக் கூறி உயிர்களை பறிப்பதா? சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சேலம், ஜூலை 22- கொரோனா நோய்த் தொற் றுக்கு தனிமைப்படுத்துவதாகக் கூறி உயிரை பறித்து வரும் அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது:  சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி  வருகின்றது. இந்த சூழலில், சேலம் மாநகர் ஒன்பதாம்பாலி இராம சாமி நகர் பகுதியில் வசித்து வந்த மாரியம்மாள் (50) என்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கூறி சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனி மைப்படுத்தப்பட்டார். இந்நி லையில், இவர் நான்கு நாட்கள் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதேபோல், அன்னதானப் பட்டி பழனியப்பா காலனியைச் சேர்ந்தவர் சாந்தா(72) மகள் கலைச்செல்வி (51). இவர் மாநக ராட்சியில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று கலைச்செல்விக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி, அவர்  அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனிமைப் படுத்தப்பட்டார். இதையடுத்த இவரது தாயார் சாந்தாவிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரை வீட்டில் தனிமைப்படுத்துவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த்குமார் என்ப வரும், அன்னதானப்பட்டி துப்பு ரவு பணி மேற்பாவையாளர் பிரபா கரன் ஆகிய இருவரும் ஜூலை 10 ஆம் தேதியன்று அவரை வீட்டி னுள் விட்டு கதவை வெளிப்பு றமாக பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். இதனையடுத்து, மூன்று நாட்க ளாகியும் எந்தவொரு தகவலும் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் மாநகராட்சி அதிகரிகளுக்கு தக வல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வந்த அதிகாரிகள் கதவை திறந்து பார்த்த பொழுது சாந்தா இறந்த கிடந்துள்ளார். மேலும், விசாரிக்கையில் இவர் பயத்தாலும், மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. நோய் தொற்று ஒருபுறம் உயிர் களை பறிக்கின்ற இந்த சூழலில் தனிமைப்படுத்துவதாக கூறி சரியான வழிகாட்டுதலும், ஆலோ சனைகளும் இன்றி இந்த இரண்டு  உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்டக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவா ரணம் வழங்கவேண்டும். இதுபோன்று தனிமைப்படு வோர்களுக்கு முறையான ஆலோ சனையும், வழிகாட்டுதலையும் மாவட்ட நிர்வாகம் வழங்கிட வேண்டும். மூதாட்டியின் உயிரி ழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் ஆன்ந்தகுமார் மற்றும் மேற்பாவையாளர் பிரபாகரன் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாலிபர் சங்கம் மனு

இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கந்தசாமி, மாவட்ட செயலா ளர் பி.கணேசன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கிழக்கு மாந கர தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

;