tamilnadu

சேலம் வழியாக ஐதராபாத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

 சேலம், ஜன.1- கேரளாவில் இருந்து சேலம் வழியாக ஐத ராபாத்திற்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.  கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும்  கொச்சுவேலியில் இருந்து சேலம் வழியே ஐதரா பாத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதன்படி, எர்ணாகுளம்-ஐதராபாத் சிறப்பு ரயில் (07118) வரும் ஜன.23, 30ஆம் தேதிகளில் (வியா ழக்கிழமை) இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக அடுத்த நாள் இரவு 10.55 மணிக்கு ஐதராபாத் சென்றடை யும்.  இதேபோல், கொச்சுவேலி-ஐதராபாத் சிறப்பு ரயில் (07116) வரும் ஜன.6, 20, 27 ஆகிய தேதிக ளில் (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது. கொச்சு வேவியில் காலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த  ரயில், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம் வழியே அடுத்த நாள் மதியம் 2  மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த ரயில் களுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண் டுள்ளது.

;