மார்க்ஸ்சிட் கட்சியின் சேலம் மேற்கு மாநகரக்குழு உறுப்பினர் சிவதாபுரம் சி.சுந்தரராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று அரியாக்கவுண்டம்பட்டி கட்சி அலுவலகத்தில் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி எம்.குண சேகரன், ஐ.ஞானசெளந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மேற்கு கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்று செவ்வஞ்சலி செலுத்தினர்.