tamilnadu

img

சேலம்: தேர்தல் முடிவுகளை அறிவிக்க மறுக்கும் தேர்தல் ஆணையம் திமுகவினர் முற்றுகை போராட்டம்

சேலம், ஜன.2- சேலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான வாக்கு எண் ணிக்கை முடிந்த நிலையில், முடிவுகளை அறிவிக்க மறுக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  20 ஊராட்சி ஒன்றியங் களுக்கு தேர்தல் நடை பெற்றது.  இதில்29 மாவட்ட  ஊராட்சி உறுப்பினர்கள், 288  ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 385 கிராம ஊராட்சிகள், 3,597  கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னர்களுக்கான தேர்தல் நடை பெற்றது. இதற்காக 20 மையங்களில் வாக்கு எண் ணும் பணி நடைபெற்றது.  காலை 8 மணி முதல் நடைபெற்று வந்த  வாக்கு எண்ணிக்கையில் பல் வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பல இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்துவெற்றி பெற்ற வர்களை அறிவிக்க வலியுறுத்தி திமுகவின் மாவட்டச் செயலாளர் கள், சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்  தலைமையில் சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர்.  அப்போது அவர்கள் கூறியதா வது, சேலம் மாவட்டத்தில் திமுக  கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற வர்கள் முறையாக தேர்தல் அதி காரிகளால் அறிவிக்கப்படாமல்  இழுத்தடிப்பு செய்கின்றனர். குறிப் பாக, கொளத்தூர் மற்றும் தார மங்கலம் ஆகிய பகுதிகளில்  மதியமே வாக்கு எண்ணிக்கை  முடிந்து விட்்டது. ஆனால் இது வரை வெற்றிபெற்றவர்களை அறிவிக்காமல் தேர்தல் அதி காரிகள் இழுத்தடிப்பு செய்து  வருகின்றனர். மேலும் எடப் பாடி தொகுதியில் இதுவரை  வெற்றி பெற்றதற்கான அறி விப்பை தேர்தல் அதிகாரி களால் வெளியிடப்படவில்லை.  சேலம் மாவட்டம்  தமிழக முதல் வரின் சொந்த மாவட்டமாக  இருப்பதால் திமுக கூட்டணி கட்சி களின் வெற்றியை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க மறுத்து வரு கிறது. ஆகவே, உடனடியாக தேர்தல் வெற்றியை மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்க  வேண்டும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இத னால் ஆட்சியர் அலுவலகத்தில்  பெரும் பரபரப்பு நிலவியது. 

;