tamilnadu

சேலம் ரயில்வே அதிகாரி வீட்டில் கொள்ளை

சேலம், பிப். 6- சேலத்தில் ரயில்வே அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகளை மர்ம  நபர் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சேலம், சூரமங்கலத்திலுள்ள முல்லை நகர் பகுதி யில் வசித்து வரும் பசுபதி என்பவர், சேலம்  கோட்ட ரயில்வேயில் வணிக பிரிவு அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது மகளின்  திருமணம் வருகின்ற 26ஆம் தேதி நடைபெற  இருப்பதால், இரண்டு தினங்களுக்கு முன்  சென்னையிலுள்ள தனது உறவினர்களுக்கு திருமண  அழைப்பிதழ் வைப்பதற்காக குடும்பத்துடன்  சென்றவர், வியாழனன்று அதிகாலை வீடு  திரும்பினார். அப்போது முன் பக்க கதவு உடைக் கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது  குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை  பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.  கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், விரைந்து வந்த சூரமங்க லம் போலிசார் கைரேகை நிபுணர்களை வரவ ழைத்து பரிசோதனை செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.