tamilnadu

img

வெட்டுக்கிளியை ஒழிக்க புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை

 இளம்பிள்ளை, ஜூன் 5- லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுகிளியை ஒழிக்க இளம்பிள்ளையை சேர்ந்த கல்லூரி மாணவன் புதிய இயந்திரம் கண்டுபிடித்துள்ளார். அதை அரசு பரி சீலனை செய்ய வேண்டுமென மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி வரும் இதே சூழலில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த வெட்டுகிளிகள் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைய தொடங் கியுள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் அதிகமாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் விவசாயத்தியே முழுவதுமாக அழிக்கும் வாய்ப்புகள் உள்ளது என விஞ் ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, வெட்டுகிளியின் பாதிப்பு ஏற்படுமோ என அனைத்து மாநில விவசாயிகள் கவ லையில் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளியான சுரேஷ்குமாரின் மகன் உதயகுமார் (19).

இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா விடுமுறையில் இருந்த மாணவன், வெட்டுக்கிளியை ஒழிப்பதற்கு இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 5 அடி உயரம் 4 அடி அகலம் கொண்ட அந்த இயந்திரம், கம்பி சுருளில் மின் சார உதவியுடன் பல்பு அமைத்து ஒரு நிமிடத்திற்கு ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளியை ஒழிக்கும் அளவிற்கு உள்ளது. இதுகுறித்து மாணவன் கூறுகையில், விவசாய நிலங் களில் மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை இந்த இயந்திரத்தில் உள்ளே விளக்கை மின்சாரம் மூலம் எரிய விட்டு அதன்மூலம் வெட்டுக்கிளியை ஒழிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் வெட்டுக்கிளியை ஒழிக்க கண்டுபிடித்த இந்த இயந்திரத்தை விவசாயத் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, அதை அரசுக்கு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இதற்குரிய அங்கீகாரம் கிடைத்தால் மாணவர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளியை கொள்ளும் எந்திரங்களை செய்து தருவதாகவும் கூறி யுள்ளார்.

;