tamilnadu

img

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க உரிய இழப்பீடு வழங்குக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முற்றுகை போராட்டம்

சேலம், ஜன. 29- விளைநிலங்களில்  உயர் மின்ன ழுத்த கோபுரம் அமைக்க  விவசாயி களிடம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  நங்கவள்ளி பகுதியில்  முற்று கைப் போராட்டம் நடைபெற்றது  சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பள்ளக்கானுரில் உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பவர்கிரிட் நிறுவனத்தை முற்றுகை யிட்டு  போராட்டத்தில் ஈடுபட்ட னர். முன்னதாக, இப்போராட் டத்தையொட்டி ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இப்போராட்டத்தின் முடிவில் பவர் கிரிட் அதிகாரிகள், மண்டல மேலா ளர் சத்தியநாராயணன் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில்,  ஏழு நாட்களுக்குள் விவசாயிக ளுக்கான இழப்பீடுத் தொகையை தந்து விடுவது என உறுதி செய் ததன் அடிப்படையில் போராட்டம் நிறைவு பெற்றது.  இப்போராட்டத்தில் உயர் மின் கோபுர விவசாய சங்கங்களின் கூட் டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி. பெருமாள், சிபிஎம் நங்கவள்ளி ஒன் றிய செயலாளர் மேவை.சண்முக ராஜா, விவசாய சங்க சங்ககிரி தாலுகா செயலாளர் ஆர்.ராஜேந் திரன், மாதர் சங்க மாவட்ட உதவி தலைவர் கே.ராஜாத்தி, விவசாய சங்க தலைவர்கள் சுரேஷ், குருநா தன், சத்தியமூர்த்தி, ஜெயவேல், பழனிசாமி, சாமிநாதன், மாதை யன், சுந்தரம், செந்தில், கண்ணன், சின்னதம்பி மற்றும் ஏராளமான  விவசாயிகள் பங்கேற்றனர்.

;